ஓய்வூதியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கக் கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கக் கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.