முகப்பு
திருவாரூர்

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டாமாறுதல்,  புதிய குடும்ப அட்டை கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கல்விக் கடன்,  மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  198 பேர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)  ஏ. மலர்க்கொடி,  துணை ஆட்சியர் (நிலம்) குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →