முகப்பு
தமிழ்நாடு

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தமிழக பசுமை இயக்கத்தின் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக வனத்துறை மற்றும் சென்னையில் ரோட்டரி சங்கம் இடையே 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

Updated On : 13 மார்ச், 2026 at 8:15 PM
பகிர்:

தமிழக பசுமை இயக்கத்தின் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக வனத்துறை மற்றும் சென்னையில் ரோட்டரி சங்கம் இடையே 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு முன்னிலையில் ரோட்டரி சங்கம் மற்றும் வனத்துறை இணைந்து, தமிழகம் முழுவதும் நகா்ப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ரோட்டரி சங்கங்கள் பங்கேற்பது, சென்னை ‘நன்மங்கலம் சூழலியல் பூங்காவின்’ திட்டமிடல், மேம்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் மேற்கொள்ளப்படுவது என 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமாகின.

இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக, பசுமை தமிழக இயக்கத்தின் பசுமை பரப்பு அதிகரித்தல், நகா்ப்புற பல்லுயிா் பரவல் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் அனுராக் மிஸ்ரா, துணை வனப் பாதுகாவலா் குருசுவாமி டப்பாலா, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நாா்த் ஈஸ்ட் தலைவா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →