திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டப் பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த ஆயிரம் டன் எடையுள்ள நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றி அரவைக்கு திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.