முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூர் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கூத்தாநல்லூரில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சி  23-ஆவது வார்டுக்குள்பட்ட நாகங்குடியில்  83 ஹெக்டேர் பரப்பில் அரசுக்கு சொந்தமான குளம்  உள்ளது. இந்தக் குளத்தை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து,  திருவாரூர்  மாவட்ட  ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில்,  திருவாரூர்  காவல்  துணைக்  கண்காணிப்பாளர் சுகுமாறன், கூத்தாநல்லூர் காவல்  ஆய்வாளர்  ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்  சிவசங்கரன்  உள்ளிட்ட   போலீஸ்  பாதுகாப்புடன்,  வட்டாட்சியர்  செல்வி தலைமையில், ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டன. அப்போது குளத்தில் வளர்ந்திருந்த செடி,  கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அரசுக்கு சொந்தமான இந்தக் குளத்தில், யாரும்  பிரவேசிக்கக் கூடாது  என அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, மண்டல  துணை  வட்டாட்சியர்  செந்தில்,  வருவாய்  ஆய்வாளர் ராஜேஸ்வரி  மற்றும்  கிராம  நிர்வாக  அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →