திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.
திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 14,385 மாணவ, மாணவியர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 14,223 பேர் தேர்வெழுதினர். 162 பேர் தேர்வுக்கு வரவில்லை. 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 35 மாற்றுத் திறனாளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இவர்களுக்கு தரைதளத்தில் தேர்வு மையங்கள் (தனி அறை) அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வுப் பணியில் 50 தலைமை கண்காணிப்பாளர், 2 கூடுதல் தலைமை கண்காணிப்பாளர், 75 அலுவலக பணியாளர் மற்றும் கூடுதல் அலுவலக பணியாளர்கள், 750 தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் 95 நிலையான படைகளும், 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன.