முகப்பு
திருவாரூர்

ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திருவாரூர் அருகேயுள்ள புலிவலத்தில் வியாழக்கிழமை முழுவதும் இலவச உணவு வழங்கப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திருவாரூர் அருகேயுள்ள புலிவலத்தில் வியாழக்கிழமை முழுவதும் இலவச உணவு வழங்கப்பட்டது.
புலிவலத்தில் செந்தில் என்பவரது தேநீர் கடையில் ஒரு ரூபாய்க்கு வியாழக்கிழமை முழுவதும் தேநீர் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், அதேபகுதியில் கார்த்தி என்பவரது உணவகத்தில் நாள்முழுவதும் இலவச உணவு வழங்கப்பட்டது. 
உணவு மற்றும் தேநீர் வழங்கியதை திமுக ஒன்றியச் செயலர் தேவா தொடங்கி வைத்தார்.
குடவாசலில்... 
குடவாசல் பேருந்து நிலையத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 
நிகழ்ச்சியில் குடவாசல் ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன்,  நகரச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் நகர திமுக சார்பில், நகரச் செயலர் எஸ்.எம். காதர் உசேன் தலைமையில் நடைபெற்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், அவைத் தலைவர் பக்கிரிசாமி, பொருளாளர்  ஏ.ஏ. அமீர்தீன்,  மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் பி. பக்கிரிசெல்வம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →