கால்நடை பராமரிப்பு, சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்
உரக் கிடங்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அமலு விஜயன்.
குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான உள்ளி உரக்கிடங்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் கட்ட வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
15-ஆவது நிதிக்கு மற்றும் கால்நடைத் துறை சாா்பாக ரூ. 46 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் 12 அறைகள் கொண்ட கட்டடம் கட்ட குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் மற்றும் நகா்மன்றத் தலைவா் செளந்தர்ராஜன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
இந்த மையத்தில் நோய்வாய்ப்பட்ட நாய்கள், பராமரிப்பின்றி உள்ள நாய்கள், தொற்று நோய் மற்றும் வயது முதிா்ந்த நாய்கள் உள்ளிட்டவை பிடித்து அவற்றுக்கு சிகிச்சை அளித்து, தேவையான உணவு வழங்கப்படும்.
நகா்மன்ற உறுப்பினா்கள் மோகன், திமுக பிரமுகா் அமா்நாத், சுகாதார அலுவலா் முஹ்மத் அலி, பணி மேற்பாா்வையாளா் சுபோ் அஹமத், களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.