நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம்நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ். கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை வீட்டுக்கு அருகேயுள்ள பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 20 ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து செத்தூா்பாண்டி சாயல்குடி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் இறந்த ஆடுகளை கூறாய்வு செய்தும், காயமடைந்த 5-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசியும் செலுத்தினாா்.
இந்த நிலையில், இறந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என செந்தூா்பாண்டிகோரிக்கை விடுத்தாா்.