அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கீழப்பெருமழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் முப்பெரும் விழா, பெற்றோர் ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கீழப்பெருமழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் முப்பெரும் விழா, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் அ. சோமசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் அ.செந்தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நா. சொக்கலிங்கம், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெ. சுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ப. கருணாமூர்த்தி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இவ்விழாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இரா. முருகேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நாகவள்ளி, கல்விக்குழுத் தலைவர் க. பூமிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் வே. மணவழகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் வி. ஸ்ரீதர், ச. சுப்பிரமணியன், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர் சி. ராம்பிராஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் பொ. முருகையன் வரவேற்றார். ப. வேதரெத்தினம் நன்றி கூறினார்.