முகப்பு
திருவாரூர்

ஞானவேல் ரதயாத்திரைக்கு வரவேற்பு

கூத்தாநல்லூர் வட்டத்துக்கு புதன்கிழமை வந்த ஞானவேல் ரதயாத்திரைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

Updated On : 29 மார்ச், 2018 at 9:37 AM
பகிர்:

கூத்தாநல்லூர் வட்டத்துக்கு புதன்கிழமை வந்த ஞானவேல் ரதயாத்திரைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 
முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து ஞானவேலுடன் வேல் ரதம் புறப்பட்டு சுவாமிமலையிலிருந்து கொரடாச்சேரி வழியாக லெட்சுமாங்குடிக்கு வந்தது. திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை லெட்சுமாங்குடி பாலத்தில் சக்தி செல்வராஜ்,  ஓய்வுபெற்ற அரசு அலுவலர் எஸ். வரதராஜன், ராமதாஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் ரதத்தில் அமைக்கப்பட்டிருந்த ஞானவேலுக்கு மாலை அணிவித்து வணங்கி வரவேற்றனர். தொடர்ந்து, ஞானவேலுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. முன்னதாக, வேல்ரதம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, வேல்ரதம்,  மரக்கடை,  கோரையாற்றங்கரை,  குடிதாங்கிச்சேரி வழியாக மன்னார்குடிக்குச் சென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.