முகப்பு
திருவாரூர்

தீக்காயமடைந்த பெண் சாவு

கூத்தாநல்லூர் அருகே மண்ணெண்ணைய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  

Updated On : 29 மார்ச், 2018 at 9:38 AM
பகிர்:

கூத்தாநல்லூர் அருகே மண்ணெண்ணைய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  
கூத்தாநல்லூர் வட்டம், வேற்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி மாலதி (25 ). இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். மாலதி மார்ச் 24-ஆம் தேதி மண்ணெண்ணைய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வெடித்தது. 
இதில், படுகாயமடைந்த மாலதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியைக் காப்பாற்ற முயற்சித்த பாலன் தீக்காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.