முகப்பு
திருவாரூர்

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சாவு

திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 30 மார்ச், 2018 at 1:12 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் பாலஅருள்நிதி (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 20-ஆம் தேதி ஆரியலூர் பிரதான சாலையில், ஆட்டோவில் சென்றபோது எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது.  இதில் படுகாயம் அடைந்த பாலஅருள்நிதி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.