வேளூர் சாய்பாபா ஆலயத்தில் 100-ஆவது ஜீவசமாதி நாள் அனுசரிப்பு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில், அவரது 100-ஆவது
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில், அவரது 100-ஆவது ஜீவசமாதி நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அத்துடன் சாய்பாபாவின் அவதாரத்துக்குப் பிறகு பக்தர்களுக்கு அவர் அருள்பாலித்த விதம் குறித்து பிரசங்கம் நடைபெற்றது. சிறப்பு நாகசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் எம்.ஏ.பி. குணசேகரன், வேணுகோபாலன், குணசேகரன் மற்றும் உபயதாரர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.