உண்ணாவிரதப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்தவாறு உள்ளன. இதேபோல், திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் தினசரி பல்வேறு வகையானப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி அடியக்கமங்கலம் கடைவீதியில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஒன்றிய நிர்வாகி அருள் தலைமை வகித்தார். இதில் தேமுதிகவினர் திரளாக கலந்துகொண்டனர்.