முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் அன்னையர் தின விழா

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உதவும் மனங்கள் அமைப்பின் சார்பில் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கத் தலைவர்

Updated On : 15 மே, 2018 at 5:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உதவும் மனங்கள் அமைப்பின் சார்பில் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். பிஸ்மில்லாபேகம் தலைமை வகித்தார். நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத் தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் இ. ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறந்த சமூக சேவைக்கான அன்னை ரத்னா சேவை விருதை திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கச் செயலாளர் எஸ். கலாவுக்கு நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன் வழங்கினார். அன்னை ஓர் ஆலயம்' என்ற தலைப்பில் திருவையாறு பாரதி இயக்கத்தைச் சேர்ந்த அ. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
விழாவில், லயன்ஸ் சங்க முன்னாள் மண்டலத் தலைவர் எம். அப்பாவு, திருவாரூர் பாரதி மக்கள் மன்றச் செயலாளர் டி. ராஜ்குமார், நீடாமங்கலம் நற்பணி மன்றத் தலைவர் என்.எம். மைதீன், உதவும் மனங்கள் அமைப்பின் நிர்வாகிகள் ஆர்.ஆர். ராம்ராஜ், கே.எஸ். பொன்னுசாமி, எல். ஜெயக்குமார், சி. முருகன், பள்ளித் தலைமையாசிரியை க. தேவிலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். மாணவ, மாணவியரின் பேச்சு, பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உதவும் மனங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். குமார் வரவேற்றார். புரவலர் ராஜன்ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.