திருவாரூர்

மின்சாரம் வழங்கக்கோரி சாலை மறியல்

DIN

திருவாரூர் அருகே குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கக் கோரி சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம், கருப்பூர், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடந்த 5 தினங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்காமல் அப்பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்காமல்  ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு முன்னுரிமை அளித்து மின்சார இணைப்பு வழங்குவதைக் கண்டித்தும், குடியிருப்பு வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 இந்த மறியலால் திருவாரூர்- நாகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம், கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரசவனங்காடு உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் வழங்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT