திருவாரூர்

கஜா புயலால் டெல்டா மாவட்டம் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுள்ளது: டிடிவி. தினகரன் 

DIN

கஜா புயலால் டெல்டா மாவட்டம் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன். 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பிறந்தது முதல் ஹெலிகாப்டரிலேயே பயணம் செய்ததுபோல், கஜா புயலில் பொதுமக்கள் விவசாயம், வீடுகள் என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இப்புயலால் டெல்டா மாவட்டம் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு எப்போது வருவோம் என மக்கள் கதறுகிறார்கள். தமிழக அரசு எங்களை முகாம்கள் என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளனர். புயல் வீசிய அன்று காலை உணவு கூட வழங்கவில்லை. இதற்கு முன்பு வீசிய புயல்களிலும், வெள்ளத்திலும் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஆட்சியில் இருந்த அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். 
தற்போது, ஆட்சியில் இருப்பவர்கள் எங்கும் போக முடியவில்லை. மக்கள் எதிர்க்கிறார்கள். பாதிக்கப்பட்ட இவர்களைப் பார்ப்பதை விட, முதல்வர் பழனிசாமிக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. 4 மாவட்டங்களில் மக்கள் வீடுகள் இல்லாமல் உள்ளனர். முதல்வர் சாலையில் போக முடியாதா ? பால் பாக்கெட் ரூ. 100-க்கு விற்கிறார்கள். மெழுகுவர்த்தி கிடையாது.
மக்கள் என்ன சமூக விரோதிகளா, அமைச்சர் ஓ.எஸ். மணியன் சொந்தத் தொகுதியில் சுவர் ஏறிக் குதித்து ஓடக்கூடிய நிலையில் உள்ளது. வைத்திலிங்கத்தை அவரது ஊரிலேயே மறித்துள்ளனர். அமைச்சர் காமராஜை திருத்துறைப்பூண்டி விளக்குடியில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவர்கள் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார்கள் என்று தான் எதிர்க்கிறார்கள். உணவுத் துறை அமைச்சர் ஊரில், அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் தவிக்கின்றனர். கைத்தறித் துறை அமைச்சர் உள்ள டெல்டா மாவட்டத்தில் மாற்றுத் துணி இல்லாமல் உள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை. பொய் சொல்வதை விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட மக்கருக்கு நல்லது செய்யுங்கள். பல்லாயிரம் கோடி கோடி சேதம் அடைந்துள்ளது. தென்னை விவசாயிகள் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பேட்டியின்போது, அமமுக மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், நகர மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கு. சீனிவாசன், நகரச் செயலர் சின்ன அமீன் ஆகியோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT