சரக்கு வாகனம் மோதி ஒருவர் காயம்; ஓட்டுநர் கைது
கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் சனிக்கிழமை மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் சனிக்கிழமை மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது
செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள தாழைக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (34). இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், லெட்சுமாங்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
மேலப்பனங்காட்டங்குடி பிள்ளையார் கோயில் அருகே வரும்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மோகன்தாஸை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான சொரக்குடி, பெத்தபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஹாஜா மைதீன் (22) என்பவரை கைது செய்தனர்.