முகப்பு
திருவாரூர்

முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

முனைவர் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:56 AM
பகிர்:

முனைவர் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு நெட், செட் மற்றும் முனைவர் ஆசிரியர்கள் சங்கத்தின்  பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:  அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, அரசுப் பள்ளியில் பணிபுரிகிற நெட்,  செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் நெட், செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 50  சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சென்னையில் முதல்கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.