திருவாரூர்

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாணவரணிச் செயலர் ஆசாத் தலைமை வகித்தார். இதில், கல்வியாளர்கள் சமீர், சாகுல் ஆகியோர் பங்கேற்று, மாணவர்கள் எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்ற தலைப்பின்கீழ் விளக்கம் அளித்தனர். கல்வி நிறுவனங்களின் தரம், குறைந்த செலவில் சிறப்பான கல்வித் தரத்தை கொடுக்கக் கூடிய கல்லூரிகள், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு மூலம் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகள், பொறியியல் துறைகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்ற பின் எந்தெந்த துறைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் அமைப்பின் திருச்சி மாவட்ட துணைச் செயலர் உமர், திருவாரூர் வடக்கு மாவட்ட செயலர் அனஸ் நபில், மாவட்ட துணைச் செயலர் பாஜீல் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT