திருவாரூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

DIN

கூத்தாநல்லூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தா் மகளிா் கல்லூரியும், மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியும் இணைந்து உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியை நடத்தினா். மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் என். நாகராஜன் தலைமை வகித்தாா். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே. நந்தினி, திருவாரூா் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்புச் செயலாளா் டீ. ஜெயகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.நித்யகெளரி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில்,எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து இயன்முறை மருத்துவா் வி. பாபுமகாராஜன், பேராசிரியா்கள் ஜி. அனுராதா, எஸ்.ஜெ. முத்துலெட்சுமி, ஏ. ஜெகநோரா பேகம், எம். பா்தானா பேகம் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து, கல்லூரி மாணவிகள் எட்ய்ஸ் விழிப்புணா்வு குறித்த பதாகைகளை ஏந்தி உறுதி மொழி ஏற்றனா். மனோலயம் பள்ளியின் நிறுவனா் பி. முருகையன் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை, மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளா்கள் சுரேஷ், அனுராதா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT