நெடும்பலம் அரசுப் பள்ளிக்கு விருது
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. விருதை, தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வரின் தனிச் செயலருமான சிவ. ராஜரத்தினம், தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்கத் தலைவர் சோமாலே சோமசுந்தரம், பணி ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் டி.எஸ்.கே. இளங்கோவன் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் தங்கராசுவிடம் வழங்கினர்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ராஜரெத்தினம் பேசியது: நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டடம், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டித் தரப்படுமென உறுதியளித்தார்.