திருவாரூர்

பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இன்று தொடக்கம்

DIN

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சனிக்கிழமை (ஜன.5) தொடங்குகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ஆர்.கே. செந்தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் வழங்கப்படுகிறது. பயிற்சி காலம் 100 மணி நேரம் ஆகும்.
 தங்கத்தைப் பற்றிய அடிப்படை அறிவு, தங்கத்தின் தரம், கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், நகைகள் செய்தல், ஹால்மார்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் இப்பயிற்சியில் இடம்பெறும். அத்துடன், செயல்முறை பயிற்சியும் வழங்கப்படும். இதில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். 
பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றவும், நகை அடகு கடை, ஆபரணக் கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது. 
விடுமுறை நாள்களில் நடைபெறும் இப்பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர், இளங்கலை, முதுநிலைப் படிப்போர் தங்கள் படிப்புக்கு இடையூறு இல்லாமல் இப்பயிற்சியில் சேரலாம்.
பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்குகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி, பயிற்சியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT