திருவாரூர்

திருமுறை பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூரில் நடைபெறும் திருமுறை பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவாரூர் மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: 
திருவாவடுதுறை ஆதீனத்தால் நடத்தப்படும் திருமுறை பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. தமிழ் இசையின் பெருமையையும், தேவார, திருமுறைகளை பண் அமைப்போடு பாடும் முறையையும் அனைவரும் கற்கும் வகையில் திருவாவடுதுறை ஆதீன குரு மகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் அருளாசியுடன் தமிழகமெங்கும் 79 திருமுறைப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.  ஒரு தொகுப்பு, இரண்டாண்டுகள் என நடைபெறும் பயிற்சித் தொகுப்பு வகுப்புகள், இதுவரையில் 5 நிறைவு பெற்றுள்ளன. 2019- 2020- ஆம் ஆண்டுக்கான 6-ஆம் தொகுப்புக்கு மாணவர் சேர்க்கை இம்மாதம் (ஜனவரி) தொடங்கியிருக்கிறது. சிறந்த இசைவாணர்களான ஓதுவா மூர்த்திகளின் மூலம் பாடுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் திருவாரூர் மையத்தில் சேர்வதற்கு  94 86334052,  9944574126,  9842465655 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
மாதந்தோறும் நடைபெறும் பயிற்சி வகுப்பின் தகவல்கள், மாணவர்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக தெரிவிக்கப்படும். இப்பயிற்சியில் மீண்டும் சேர 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT