திருவாரூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில் ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் தொடங்க கடனுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 217 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அந்த மனுக்களை வழங்கி, அவற்றை பரிசீலித்து குறித்த காலத்துக்குள்  நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, 5 பேருக்கு ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்குத் தங்கத்தையும், ஒருவருக்கு ரூ.5, 800 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் ரூ.2,65,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். 
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்,  துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஷன்குமார் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT