திருவாரூர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

DIN

திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   செங்கல் சூளையில் பணிபுரிவோர், இடம் விட்டு இடம் பெயர்வோர், மாற்றுத்திறனாளிகள்  இவர்களில் பெரும்பாலானோர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில்லை. இவர்களைக் கண்டறிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
குடவாசல் அருகே செல்லூர், காங்கேயநகரம், சேங்காலிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் கலைவாணன் தலைமையில், அலுவலர்கள்
பங்கேற்றனர். 
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே திருவோணம் பகுதியில் 6 குழந்தைகள் கண்டறியப்பட்டு, சேர்க்கை நடைபெற்றுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த குழந்தைகளுக்கு அரசு தரும் நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்து சேர்க்க வேண்டியுள்ளது. மே மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT