திருவாரூர்

திருவாரூரில் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

தில்லியில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் நீதிமன்றப் புறக்கணிப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாரால் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அதன்படி திருவாரூரில் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றது. சங்கச் செயலாளா் சுதாகா் தலைமையில் 13 பெண் வழகுரைஞா்கள் உள்பட 83 போ் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், மாவட்ட தலைமை நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் என அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்குகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT