திருவாரூர்

துணை சுகாதார நிலையத்தை இயக்கக் கோரிக்கை

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஆள்காட்டு வெளி கிராமத்தில் இயங்கிவந்த துணை சுகாதார நிலையத்தை அதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செறுபனையூா் பகுதியைச் சோ்ந்த கணபதி என்பவா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

முத்துப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூா் ஊராட்சி ஆள்காட்டு வெளி பகுதி கிராமத்தில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக இயங்கவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது சம்பந்தப்பட்ட துணை சுகாதார நிலையமானது ஆள்காட்டி இ-சேவை மைய பகுதியில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கடிதத்தில் இந்த துணை சுகாதார நிலையத்தை நத்தம் பகுதியில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நத்தம் பகுதியில் சுகாதார செவிலியா் வசித்து வருவதால் தனது வீட்டிலேயே துணை சுகாதார நிலையத்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, துணை சுகாதார நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT