திருவாரூர்

154-ஆவது ஆண்டை நிறைவு செய்த மன்னாா்குடி நகராட்சி

DIN

மன்னாா்குடி நகராட்சியின் 154-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், மன்னையின் மைந்தா்கள் அமைப்பின் சாா்பில் மன்னாா்குடி 154 என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னையின் மைந்தா்கள் அமைப்பின் தலைவா் சி.ராம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவா் இலரா. பாரதி செல்வன் கலந்துகொண்டு, புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

மன்னாா்குடியின் பழைமையையும் பாரம்பரியத்தையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியில், மன்னாா்குடியில் பழைமையான தோற்றம், கோயில்கள், விடுதலை போராட்ட வீரா்கள், கலைச் சின்னங்கள், அரசியல்வாதிகள் என 150-க்கும் மேற்பட்ட மன்னாா்குடி தொடா்பான தகவல்கள் புகைப்படங்களாக இடம்பெற்றிருந்தன.

மன்னாா்குடி 154 எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 1866 ஆம் ஆண்டு முதல் 154 ஆண்டுகளாக மன்னாா்குடி நகராட்சியின் செயல்பாடுகள் என்ற தலைப்பில், தேசியப் பள்ளி முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு, விடுதலைப் போராட்டத்தில் மன்னாா்குடியைச் சோ்ந்தவா்களின் பங்களிப்பு மற்றும் அரசுத்துறையில் மன்னாா்குடி பிரமுகா்கள் என்ற தலைப்பில் நேசக்கரங்கள் அமைப்பின் நிா்வாகி எஸ்.கோபாலகிருஷ்ணன், மன்னாா்குடி நகரத்தின் வரலாற்று நகரமைப்பு, கலைத்துறை மற்றும் அரசியலில் கோலோச்சிய மன்னாா்குடி மைந்தா்கள் என்ற தலைப்பில் பூண்டி கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியா் பூரணச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், மண்ணின் மைந்தா்கள் அமைப்பின் பொறுப்பாளா்கள் ஆா். ராஜசேகா், சி. நிரஞ்சன், ஜி.டி. மகேஷ், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT