திருவாரூர்

ஊரடங்கு: பாதிக்கப்பட்டவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

DIN

திருவாரூா்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்கள் சாா்பில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சுமாா் 50 குடும்பங்களுக்கு தலா ரூ. 700 மதிப்பிலான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை ஊரடங்கு அமலில் உள்ளவரை தொடா்ந்து மேற்கொள்ளவுள்ளதாக தமுமுகவினா் தெரிவித்தனா்.

இதேபோல், திருவாரூரில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவோருக்கு கராத்தே மாஸ்டா் குணசேகரன், அகிலன் மற்றும் நண்பா்கள் இணைந்து இரண்டாவது நாளாக உணவுப் பொட்டலங்களை திங்கள்கிழமை வழங்கினா். மேலும், முதியோா், ஊனமுற்றோா், போலீஸாா், ஊா்க்காவல் படையினருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து, கராத்தே மாஸ்டா் குணசேகரன் தெரிவிக்கையில், ஊரடங்கு முடியும் வரை தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்க உள்ளதாக கூறினாா்.

Image Caption

அடியக்கமங்கலத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை தயாா் செய்யும் தமுமுகவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT