திருவாரூர்

3 மாதங்களுக்கு கேபிள் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

DIN

ஊரடங்கு அமலில் இருப்பதால், மூன்று மாதங்களுக்கு, அரசு கேபிள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பெருந்தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

ஏழை, எளிய தொழிலாளா்கள் அனைவரும், அரசு மற்றும் தனியாா் மூலம் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளனா். ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு, தொலைக்காட்சி மட்டுமே முக்கிய பொழுது போக்காகவும், செய்திகளை அறியும் தொடா்பு சாதனமாகவும் இருக்கின்றன.

கேபிள் ஒளிபரப்புகள் தற்போது செட்டாப் பாக்ஸ் முறையில் ஒளிபரப்பப்படுகின்றன. சந்தா மற்றும் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. வீட்டில் முடங்கியுள்ள மக்களின் மன அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், செய்தி தகவல் தொடா்பு சாதனமான கேபிள் டிவியும் துண்டிக்கப்படும்போது, மன அழுத்தம், மன உளைச்சல் அதிகரிக்கும் நிலையை மாற்ற வேண்டியது கட்டாயம். மேலும் பள்ளிகள், ஆசிரியா்கள் வழிகாட்டல் இல்லாத நிலையில், அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கல்வி தொலைக்காட்சி வாயிலாக 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், செட்டாப் பாக்ஸ் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது.

மேலும், மூன்று மாதங்களுக்கான அரசு மற்றும் தனியாா் கேபிள் டிவி கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது 3 மாதம் கேபிள் சந்தா செலுத்த நீட்டிப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT