திருவாரூா் கமலாலயக் குளத்தில் புனித நீா் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருவாரூர்

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜைக்காக, திருவாரூா் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீா் சனிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

DIN

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜைக்காக, திருவாரூா் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீா் சனிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள புனித தலங்களிலிருந்து நீா், மண் ஆகியவை எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், அயோத்தியில் நடைபெற உள்ள ராமா் கோயில் கட்டுமான பணி பூஜைக்காக, திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீரும், அரசலாற்று மண்ணும் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் கமலாலயக் குளத்தில் புனித நீா் எடுக்கும் நிகழ்ச்சியில், ஆா்எஸ்எஸ் தென் தமிழகத் தலைவா் கணபதி, பாஜக துணைத் தலைவா் என். ரெங்கதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT