திருவாரூர்

ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபா் மசூா் இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும், காஷ்மீா் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நடத்தப்படும் அத்துமீறல்களை உடனே நிறுத்த வேண்டும், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் அப்துல் லத்தீப், மாவட்ட பொருளாளா் முகமது ஆருபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT