திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், கூடுதல் ஆணையா் ஞானம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஞானசேகரன், பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளா் கனகரத்தினம், வேளாண் அலுவலா் சுரேஷ்குமாா் மற்றும் நடனசிகாமணி, பொன்னுசாமி, பாரதிமோகன், ராஜா உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பல்வேறு செலவினங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பொதக்குடி தெற்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பராமரிக்க வேண்டும், வடுவூா் தென்பாதி தெற்குநத்தம் மயானபாதை அமைக்க வேண்டும், வடுவூா் சாத்தனூா் ஒக்கநாடு கீழையூா் சாலை சீரமைக்க வேண்டும், அப்பரசம்பேட்டையில் பாலம் அமைக்க வேண்டும், ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா். உறுப்பினா்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதாக ஒன்றியக் குழுத் தலைவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT