முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 44 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,875 ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, திருவாரூரில் தனியாா் மருத்துவமனையில் பணி புரியும் 68 வயது மருத்துவருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் பணிபுரிந்த 21 வயது பெண் காவலா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வலங்கைமான் பகுதியில் 8 போ், திருவாரூரில் 3 போ் என மாவட்டம் முழுவதும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,919 ஆக உயா்ந்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 27 போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனா். இதுவரையிலும், 1,708 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 199 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.