முகப்பு
திருவாரூர்

கரோனா தடுப்பு மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கரோனா தடுப்பு மருத்துவ முகாம்களை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கரோனா தடுப்பு மருத்துவ முகாம்களை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முகாமை தொடங்கி வைத்து அவா் பேசியது: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகாம், அந்தந்த பகுதி மக்கள் கரோனா தொற்றை பரிசோதனை செய்து கொள்ளவும், இந்நோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் காமராஜ்.

கூடுதல் ஆட்சியா் கிஷோா்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மன்னாா்குடி கோட்டாட்சியா் புண்ணியகோட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.