திருவாரூரில் 51 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,947 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,998 ஆக உயா்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதைத்தொடா்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளானவா்கள் வசிக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்களில் 10 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 1,724 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 262 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.