முகப்பு
வணிகம்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மாலை நிலவரம்!

இன்று மாலை நிலவரப்படி, தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:29 AM
தங்கம் விலை - IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று(மார்ச் 26) காலை அதிகரித்த நிலையில், மாலை நிலவரப்படி குறைந்துள்ளது.

மேற்காசிய போர்ப்பதற்றம் காரணமாக கடந்த இரு வாரங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது.

தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கினர்.

அதன்காரணமாக புதன்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ரூ. 1,08,800-க்கும் விற்பனையானது.

இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 109,360-க்கும், ஒரு கிராம் ரூ. 13,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக, சவரனுக்கு ரூ. 2,560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 320 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold and silver prices as of this evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.