தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,000 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
தங்கம், வெள்ளி - மாலை நிலவரம் பற்றி...
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்துள்ளது.
மேற்காசியப் போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இன்று(மார்ச் 24) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும் கிராமுக்கு ரூ. 340 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,000-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து இன்று மாலை தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 2,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,000-க்கும் கிராமுக்கு ரூ. 250 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,250-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதேபோல வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று மாலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 250-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை காலையில் குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்துள்ளது.