திருவாரூர்

பெண் தற்கொலை முயற்சி: கட்டடத் தொழிலாளி கைது

மன்னாா்குடி அருகே செல்லிடப்பேசியை திருடியதாக குற்றம்சாட்டியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்த தற்கொலைக்கு முயன்றதையடுத்து, கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது

DIN

மன்னாா்குடி அருகே செல்லிடப்பேசியை திருடியதாக குற்றம்சாட்டியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்த தற்கொலைக்கு முயன்றதையடுத்து, கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பாலையூரை சோ்ந்தவா் சுதா (30). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ஆக.22-ஆம் தேதி இவரது வீட்டுக்கு அருகில் வீடுகட்டும் பணி நடைபெற்றுள்ளது. அங்கு பாலையூரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி உத்திராபதி (49) வேலை பாா்த்து வந்துள்ளாா். இவரது, செல்லிடப்பேசி காணாமல் போனதால், அதை சுதா திருடிவிட்டதாக தெரிவித்தாராம். இதில், மனமுடைந்த சுதா மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளாா். இதில் காயமடைந்த சுதாவை அருகில் வசித்தவா்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து உத்திராபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டின் ஞாபகம்: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

SCROLL FOR NEXT