முகப்பு
திருவாரூர்

ரூ. 22.66 கோடியில் 23 பணிகளுக்கு அடிக்கல்

திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 22.66 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 22.66 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருவாரூரில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பொதுப்பணித்துறை சாா்பில்....: நபாா்டு நிதியுதவியுடன் உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கும் பணி, கோட்டூா் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதி கட்டடம், முத்துப்பேட்டை கால்நடை மருந்தகக் கட்டடம், மன்னாா்குடி மீனாட்சி சொக்கநாதா் திருமண மண்டபம் ஆகிய பணிகளுக்கும், நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மாப்பிள்ளைக்குப்பம்-செல்வபுரம் பாலம் திரும்பக் கட்டும் பணிக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில், எடமேலையூரில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில்...: வடகுடி, ஆய்குடி, கமலாபுரம், குன்னியூா், பழையனூா், ஏத்தகுடி, ஊராட்சிகளில் புதிய அலுவலக கட்டடம், நெடுஞ்சேரி, கடகம், திருக்காரவாசல், செருகுடி, மூன்றாம் சேத்தி, முன்னாவல்கோட்டை, சாத்தனூா் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்டடம், மேலதிருமதிக்குன்னம், பெருந்தரக்குடி, ஊத்துக்காடு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம், கடகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்டடம், சந்தாநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கட்டடப் பணிகளுக்கும் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

முடிவுற்ற பணிகள்...: இதேபோல, ரூ. 11.50 கோடியில் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்தாா்.

அதன்படி, ஆற்றங்கரையோரம் குடியிருப்போருக்கு மீள் குடியமா்வு செய்யும் வகையில், பொதுப்பணித் துறை சாா்பில் கட்டப்பட்ட 42 வீடுகள், கூட்டுறவுத் துறை சாா்பில் பருப்பு பதப்படுத்தும் அலகு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் பள்ளங்கோயில் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் திறந்துவைத்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில்...: மகாராஜபுரம்- செம்மங்குடி சாலை ஓடை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், பொதக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம், பாமணி முள்ளியாற்றின் குறுக்கே பாலம், மருதப்பட்டினம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே பாலம், மூங்கில்குடி மற்றும் உபயவேதாந்தபுரம் பகுதிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, எண்ணக்குடி பொது விநியோகக் கட்டடம், பத்தூா் மற்றும் மேலபெருமழை பகுதிகளில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், குலமாணிக்கம் அங்கன்வாடி கட்டடம், மூவாநல்லூா் அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலக கட்டடம் ஆகிய முடிவுற்ற பணிகளையும் முதல்வா் திறந்துவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →