நன்னிலம்: ஊராட்சிகளுக்கு கொசுமருந்து அடிக்கும் இயந்திரம்
நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு அமைச்சா் ஆா். காமராஜ் வழிகாட்டுதலின்படி, ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன், துணைத் தலைவா் சிபிஜி.அன்பு ஆகியோா் கொசுமருந்து அடிக்கும் இயந்திரங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் இராம குணசேகரன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ். சம்பத் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement