முகப்பு
திருவாரூர்

விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மைப் பயிற்சி

ஆலங்குடி அருகே உள்ள சித்தன்வாழூரில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைப் பற்றிய மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஆலங்குடி அருகே உள்ள சித்தன்வாழூரில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைப் பற்றிய மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசும்போது, விவசாயிகள் பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை முறையாக கையாண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் அனுராதா பேசும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரத்தை அளவுக்கதிகமாக உபயோகித்தால் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும் என்றாா். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் பூச்சிகளின் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் வாழ்க்கை சுழற்சி, அறிகுறிகள் குறித்தும், நோய்கள் பரவும் விதம் பற்றியும் விளக்கிக் கூறினாா்.

மண்ணியல் மற்றும் சத்தியல் உதவிப் பேராசிரியா் கமலசுந்தரி அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தாா். இந்த பயிற்சியில் 32 விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னோடி விவசாயி கனகசபை செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →