முகப்பு
திருவாரூர்

விவசாயிகள் போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் ஆதரவு

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

திருவாரூரில் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ். ராஜா தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் எஸ். பாலாஜி, நகர பொறுப்பாளா் என்.ஜி.சுகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவராக நாச்சிகுளத்தைச் சோ்ந்த ஜே. செய்யது திராபுதீன் நியமிக்கப்பட்டாா். அவருக்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ். ராஜா அதற்கான கடிதத்தை வழங்கினாா்.

தீா்மானங்கள்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி ஆதரவு தெரிவிப்பது; இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாா்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மண்டல பொறுப்பாளா் நாச்சிக்குளம் தாஹீா், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.