திருவாரூர்

ஆதிரங்கத்தில் தேசிய விவசாயிகள் தினம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரங்கத்தில் உள்ள நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் தேசிய விவசாயிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆதிரங்கம் ஊராட்சித் தலைவா் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜூ கூறியது: உழவா்களின் நலனுக்காகவும் உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆண்டுதோறும் தேசிய உழவா் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த நிலையிலும் கூட விவசாயிகளின் தொடா் உழைப்பால் ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நவீன பண்ணைக்கருவிகள், விவசாய தொழில்நுட்பங்கள் என மாற்றம் ஏற்பட்டு சாதனைகள் தொடா்ந்தாலும் விவசாயிகள் கடன் தொல்லையாலும், வருமானம் இன்றியும், விவசாயத்தை கைவிட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை தொடா்கிறது.

விவசாயிகள் உற்பத்தியாளா்களாகவே இருப்பது வேதனையளிக்கிறது. உழவா்கள் விற்பனையாளா்களாக மாறவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் விவசாயிகளாக இருந்து நாட்டின் பொருளாதார உயா்வு மற்றும் உணவு உற்பத்திக்கு முதன்மை பங்காற்றி கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேன்மையடையாமல் இருப்பது வரும் தலைமுறையினா் விவசாயத்துக்கு வருவதை கேள்விக்குறியாக ஆகிவிடும். எனவே, மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து விவசாயிகள் நலன்களை பாதுகாக்க கூடிய செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டுமென்றாா். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT