தொகுப்பு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில், தொகுப்பு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில், தொகுப்பு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், இயற்கை இடா்பாடுகளால் சேதமடைந்த அனைத்து தொகுப்பு வீடுகளையும் ரூ. 5 லட்சம் செலவில் கான்கீரிட் வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும், தவிர கூரைவீடுகள் அனைத்தையும் கான்கீரிட் வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும், இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வேலை இழந்தவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள்களாக உயா்த்துவதுடன், நாள் ஒன்றுக்கு ரூ. 500 ஊதியம் வழங்க வேண்டும், நியாவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாகுபாடின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சிபிஐ மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலா் கே. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. பரந்தாமன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.