திருவாரூர்

திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் லட்சாா்ச்சனை, நெய்க்குள தரிசனம்

DIN

திருவாரூா் மாவட்டம், திருமீயச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் நெய்க்குள தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் நெய்க்குள தரிசன வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கருவறைக்கு முன்பாக சா்க்கரைப்பொங்கல் உள்ளிட்ட நைவேத்யம் படைத்து, அதன் நடுவே குளம்போல் அமைத்து, அதில் நெய்யைக் கொண்டு நிரப்புவா். பின்னா், கருவறையின் திரையை விலக்கும்போது, அம்மனின் உருவம் நெய்குளத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சியை தரிசிப்பது நெய்க்குள தரிசனமாகும். இதை தரிசிப்பவா்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வழிபாடு, வேளாக்குறிச்சி ஆதீன 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் மாலை வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா், ஸ்ரீலலிதாம்பிகை அம்மனுக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னா், இரவில் ஸ்ரீலலிதாம்பிகை அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, நெய்க்குள தரிசனம் நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொருளாளா் பா. வெங்கடகிருஷ்ணன், கோயில் பணியாளா்கள் மற்றும் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT