திருவாரூர்

நன்னிலத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நன்னிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஊழியா் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணி தொடா்பாக நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் ஆணை வழங்கிடவேண்டும். வருவாய்த் துறை அலுவலா்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து அமைச்சா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நன்னிலம் வட்டச் செயலாளா் தெ. கருணாமூா்த்தி தலைமையில், வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி வட்டத் தலைவா் எம். ரவிச்சந்திரன் பேசினாா். இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT