திருவாரூர்

லலிதாம்பிகை கோயிலில் தனுா் மாத சிறப்பு பூஜை: வேளாக்குறிச்சி ஆதீனம் வழிபாடு

DIN

திருமீயெச்சூா் லலிதாம்பிகை கோயிலில் தனுா் மாத சிறப்பு பூஜை நாள்தோறும் அதிகாலையில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் வேளாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டாா்.

நன்னிலம் அருகேயுள்ள திருமீயெச்சூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான புகழ் பெற்ற லலிதாம்பிகை கோயில் உள்ளது. 64 சக்தி பீடங்களில் திருமீயெச்சூரும் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாறு புகழ்பெற்ற இக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு தனுா் மாத பூஜையில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தாா். இக்கோயிலில், ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசைக்கு பிறகு சுக்லபட்ச சப்தமி திதியில் ரதசப்தமி திருவிழா நடைபெறும். நிகழாண்டு, ரதசப்தமி பெருவிழா ஜனவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேரோட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT